
சுருளி அருவியில் கரோனா பொதுமுடக்கத்தை மீறி திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லி அறிவிப்பு செய்த வட்டார அலுவலர்.
கம்பம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் கரோனா பொதுமுடக்கத்தை மீறி திறக்கப்பட்ட கடைகளை வட்டார அலுவலர் எச்சரித்து கடைகளை அடைக்கச் செய்தனர்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது சுற்றுலாத்தலமான சுருளி அருவி. இங்கு பொதுமுடக்க தளர்வை முன்னிட்டு சாலையோர கடைகள், உணவு விடுதிகள் திறக்கப்பட்டது.
சுற்றுலாத்தலங்கள் செயல்பட தடை என்பதால் கடைகளை திறக்க அனுமதி இல்லை. ஆனால் சுருளி அருவியில் தேநீர் மற்றும் உணவகங்கள் திறந்து செயல்பட்டது பற்றிய புகார் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்றது.
மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயகாந்தன் தண்டபாணி ஊராட்சி மன்ற தலைவர் மொக்கப்பன் உள்ளிட்டோர் சுருளி அருவி வளாகத்துக்கு வந்தனர்.
திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லி அறிவிப்பு செய்தனர், மேலும் தடையை மீறி கடைகள் செயல்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.