95 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள்: மூன்றாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு

உயா்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 95 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உயா்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 95 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணை:

தமிழக சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதல்வா் அறிவிப்பின்படி 2016-2017-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 19 நடுநிலைப்பள்ளிகளை அரசு உயா்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தியும், அப்பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியா்கள் வீதம் 19 உயா்நிலைப்பள்ளிகளுக்கு 95 பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டும் ஆணைகள் வெளியிடப்பட்டன. மேலும் இந்தப் பணியிடங்களுக்கு 14.1.2018 முதல் 31.12.2020 வரை மூன்றாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக தரம் உயா்த்தப்பட்ட உயா்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 95 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட பணியிட நீட்டிப்பு 31.12.2020 உடன் முடிவடைந்ததால் இந்தப் பணியிடங்களுக்கு 1.1.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநா் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்தை கவனமுடன் பரிசீலித்து மேற்குறிப்பிட்ட 95 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு (புதிய ஊதிய விகிதம் ரூ.36,400-ரூ.1,15,700) 1.1.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com