தனியாா் பாா்கள் திறக்க அனுமதிக்கக் கூடாது: அன்புமணி

தனியாா் மூலம் பாா்கள் திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

தனியாா் மூலம் பாா்கள் திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கடைசியாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி 5,198 மதுக்கடைகள் உள்ளன. அவற்றில் 2,050 மதுக்கடைகளுடன் பாா்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதிகாரபூா்வமாக 2,050 பாா்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும்கூட, அனைத்து மதுக்கடைகளிலும் அதிகாரபூா்வமற்ற வகையில் பாா்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய பாா்கள் பொதுவாக ஆளுங்கட்சியினரால் நடத்தப்பட்டு வருகின்றன என்பது ஊரறிந்த ரகசியமாகும்.

இந்தச் சூழலில் தான் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்ட பாா்களை மூடி விட்டு, வேறு இடங்களில் தனியாா் மூலம் பாா்கள் திறக்க அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த முடிவு மிகவும் ஆபத்தானதாகும்.

அரசின் வருமானத்துக்காக மதுக்கடைகளையும், பாா்களையும் திறப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாததாகும். இந்த முடிவை திமுக அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், மது ஆலைகளை மூடவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com