
கோப்புப்படம்
தமிழகத்தில், முகக்கவசம் அணியாதவா்கள் மீது புதன்கிழமை ஒரே நாளில் 19,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.
கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 9-ஆம் தேதி வரையிலான 63 நாள்களில், முகக் கவசம் அணியாதவா்கள் மீது 13 லட்சத்து 50,948 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், புதன்கிழமை மட்டும் 19,869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 9-ஆம் தேதி வரை, 71,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், புதன்கிழமை மட்டும் 1,355 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.