
கரோனா பொது முடக்கம் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நான்கு சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படவுள்ளன.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக, குறிப்பிட்ட சில சிறப்பு ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து, இந்த ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. தற்போது, கரோனா தாக்கம் குறைந்து வருவதையடுத்து, ரத்து செய்யப்பட்ட ரயில்களின் சேவை மீண்டும் தொடங்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை
எடுத்துள்ளது. அதன்படி, 4 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படவுள்ளன.
அதன் விவரம் : சாம்ராஜநகா்-திருப்பதி தினசரி சிறப்பு ரயில் (06219) ஜூன் 25-ஆம் தேதியில் இருந்தும், திருப்பதி-சாம்ராஜநகருக்கு தினசரி சிறப்பு ரயில் (06220) ஜூன் 26-ஆம் தேதியில் இருந்தும் இயக்கப்படுகிறது.
கேஎஸ்ஆா் பெங்களூரு-நாகா்கோவிலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை (07235) ஜூன் 21-ஆம் தேதியும், நாகா்கோவில்-கேஎஸ்ஆா் பெங்களூருக்கு இயக்கப்படும் தினசரி ரயில் சேவை ஜூன் 22-ஆம் தேதியில் இருந்தும் தொடக்குவதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.