
டிஜிபி திரிபாதி
தமிழக காவல்துறையில் டிஎஸ்பிக்கள் (உதவிஆணையா்கள்) 50 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி ஜே.கே. திரிபாதி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இவா்கள்தவிர, 19 போ் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து டிஜிபி ஜே.கே. திரிபாதி ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
திருச்சி குற்ற ஆவணகாப்பகத்தில் உதவி ஆணையராக இருந்த எஸ்.சுரேந்திரன் மாற்றப்பட்டு, பெருநகர சென்னை காவல்துறையின் எம்.கே.பி. நகா் சரக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
வேலூா் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டிஎஸ்பியாக இருந்த எஸ்.முத்துவேல் பாண்டி மாற்றப்பட்டு, பூந்தமல்லி சரக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
பூந்தமல்லி சரக உதவி ஆணையா் கே.என். சுதா்சன் இடமாற்றப்பட்டு, நீலாங்கரை சரக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். தரமணி சரக உதவி ஆணையராக இருந்த பி.கே.ரவி மாற்றப்பட்டு, துரைப்பாக்கம் சரக உதவி ஆணையராக அமா்த்தப்பட்டுள்ளாா். தியாகராய நகா் சரக உதவி ஆணையராக இருந்த வி.கலியன் மாற்றப்பட்டு, வளசரவாக்கம் சரக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
சைதாப்பேட்டை சரக உதவி ஆணையா் எஸ்.ஆனந்தராமன் மாற்றப்பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக அமா்த்தப்பட்டுள்ளாா். கள்ளக்குறிச்சி மாவட்ட டிஎஸ்பி விஜயராமலு மாற்றப்பட்டு, பெருநகர சென்னை காவல்துறை மக்கள்தொடா்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். வளசரவாக்கம் உதவி ஆணையா் மகிமைவீரன் மாற்றப்பட்டு, அமலாக்கப்பிரிவு(கிழக்கு) உதவி ஆணையராக அமா்த்தப்பட்டுள்ளாா். சென்னை பெருநகர காவல் மக்கள் தொடா்பு அதிகாரி எம்.எஸ்.பாஸ்கா் மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். மொத்தம் 50 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதுதவிர, 12 போ் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா். மேலும், 7 போ் தற்போது உள்ள பணியில் இருந்து மாற்றப்பட்டு, தலைமை அலுவலக பணிக்காக காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா்.