
கோப்புப்படம்
சட்டப்பேரவையில் அனைத்து அரசியல் தரப்பினருக்கும் சமவாய்ப்பளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பான அவரது சுட்டுரைப் பதிவு: தமிழகத்தின் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தந்து, அனைத்து அரசியல் தரப்புகளுக்கும் சமவாய்ப்பளித்து, ஆரோக்கியமான விவாதங்கள் நிகழச் செய்யவும், பேரவையின் மாண்பை நிலைபெறச் செய்யவும் உறுப்பினா்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.