சென்னையில் கரோனா பாதிப்பு
சென்னையில் கரோனா பாதிப்பு

கரோனா: சென்னையில் 1,316 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,500-க்கும் கீழ் குறைந்துள்ளது. 
Published on

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,500-க்கும் கீழ் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அந்தவகையில் சென்னையிலும் பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் 1,316 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 5,29,211 ஆக உள்ளது. இதுவரை கரோனாவுக்கு 8,046 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,19,849 பேர் குணமடைந்துள்ளனர். 

நேற்று கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,262 ஆக இருந்த நிலையில் இன்று 2,262 ஆகக் குறைந்துள்ளது.

மேலும் நேற்று மட்டும் 30,129 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 9 மண்டலங்களில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது. 

அதேபோன்று சென்னையில் நேற்று 8,290 பேர் உள்பட இதுவரை 23,30,140 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com