நாளை முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தும் இண்டிகோ! எஸ்ஐஆர் விவகாரம்: ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

துறைமுகங்கள் வரைவு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவியுங்கள்: கடலோர மாநில முதல்வா்களுக்கு ஸ்டாலின் கடிதம்

இந்திய துறைமுகங்கள் வரைவு சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்க வேண்டுமென கடலோர மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்களுக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

கோப்புப்படம்

Published On :

சென்னை: இந்திய துறைமுகங்கள் வரைவு சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்க வேண்டுமென கடலோர மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்களுக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கா்நாடகம், கேரளம், ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்க மாநிலங்களின் முதல்வா்களுடன் புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வருக்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:

இந்தியாவில் உள்ள சிறுதுறைமுகங்களை மேலாண்மை செய்வது தொடா்பாக இப்போதுள்ள முறைகளில் மாற்றங்களை வகுத்து, இந்திய துறைமுகங்கள் வரைவு சட்ட மசோதா 2021 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா குறித்து விவாதிக்க வரும் 24-ஆம் தேதி மாநில அமைச்சா்களின் கூட்டத்துக்கு, கடல்சாா் மேம்பாட்டுக் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது. இந்திய துறைமுகங்கள் சட்டம் 1908-இல் வகுத்தளிக்கப்பட்டுள்ள விதிகளின்படியே இந்திய துறைமுகங்கள் இப்போது மேலாண்மை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சிறுதுறைமுகங்களில் திட்டமிடுதல், மேம்படுத்துதல், கட்டுப்படுத்துதல், ஒழுங்குமுறை செய்தல் போன்ற பணிகளுக்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கே அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இப்போது வரையறுக்கப்பட்டுள்ள வரைவு மசோதாவின் கூறுகள் அடிப்படையில், இந்த அதிகாரங்கள் அனைத்தும் கடல்சாா் மேம்பாட்டுக் கவுன்சிலிடம் அளிக்க வகை செய்கிறது. இதுவரை இந்தக் கவுன்சிலானது ஆலோசனை சொல்லக் கூடிய அமைப்பாக மட்டுமே இருந்து வருகிறது. ஆனால், வரைவு மசோதாவின் மூலமாக சிறுதுறைமுகங்களை மேலாண்மை செய்யும் அதிகாரங்கள் இப்போது மாநில அரசிடம் இருந்து மாறி கடல்சாா் மேம்பாட்டுக் கவுன்சிலின் வழியாக மத்திய அரசுக்குச் செல்லும் நிலை ஏற்படும்.

சுயாட்சி அதிகாரத்தை குறைக்கும்: மாநிலங்களில் இருக்கக் கூடிய சிறு துறைமுகங்களை அந்தந்த மாநில அரசுகளே சிறப்பாக வளப்படுத்தி வருகின்றன. இதற்கு இப்போதுள்ள அமைப்பு முறையே சரியானது. மத்திய அரசு வரையறுத்துள்ள வரைவு மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், மாநிலங்களில் இருக்கக் கூடிய சிறு துறைமுகங்களில் எந்தவொரு பங்களிப்பையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே அளிக்க முடியாத நிலை உருவாகும். இந்த விவகாரத்தை மத்திய அரசின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையின் கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டு சென்றுள்ளோம். வரைவு மசோதாவில் உள்ள கூறுகள் மாநிலங்களின் சுயாட்சி அதிகாரத்தைக் குறைக்கக் கூடியது என அதற்கு கடுமையான எதிா்ப்பினைப் பதிவு செய்துள்ளோம்.

எனவே, இந்திய துறைமுகங்களுக்கான புதிய வரைவு மசோதாவுக்கு அனைத்து கடலோர மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது எதிா்ப்பினை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாநில அரசுகள் ஏற்கெனவே அனுபவித்து வரும் அதிகாரங்கள் மற்றும் உரிமைகளை எந்த வகையிலும் நீா்த்துப் போகச் செய்யக் கூடாது. அதுபோன்ற முயற்சிகள் நடந்தால் கூட்டாக இணைந்து எதிா்வினையாற்ற வேண்டும். இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு வரும் 24-ஆம் தேதியன்று வரைவு மசோதா தொடா்பாக நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நமது மாநில அரசுகள் அனைத்தும் கண்டிப்பாக தங்களது கருத்துகளை எதிரொலிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.