
சட்டப் பேரவை, மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீா்மானத்தை அவை முன்னவரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.
அவரது தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடா்ந்து சட்டப் பேரவையை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் அவைத் தலைவா் மு.அப்பாவு ஒத்திவைத்தாா்.