இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குறை கேட்பு மையம் 

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் மக்கள், பக்தர்கள் வசதிக்காக பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குறை கேட்பு மையம் 
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குறை கேட்பு மையம் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் மக்கள், பக்தர்கள் வசதிக்காக பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று 25-ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்கான பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையம் தொடங்கி வைத்தார்.

இந்தச் சேவையை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 04428339999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு திருக்கோயில் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்றும், பொதுமக்கள் குறைகேட்பு சிறப்பு மையத்தில் பெறப்படும் கோரிக்கை விபரங்கள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்படும். 

கோரிக்கை பெறப்பட்டதற்கான ஒப்புதல் கோரிக்கைதாரர்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்படும். மேலும், கோரிக்கை நடவடிக்கை விவரங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com