

பிரபல இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இந்தியாவின் முன்னணி இயக்குநராக உள்ளார் ஷங்கர். ராம் சரண் படம், அந்நியன் ஹிந்தி ரீமேக், இந்தியன் 2 எனத் தற்போது மூன்று படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மருத்துவரான ஐஸ்வர்யா, புதுச்சேரி கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித்தைத் (29) திருமணம் செய்துள்ளார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன் ரோஹித் ஆவார்.
ஐஸ்வர்யா - ரோஹித் திருமணம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் இத்திருமணத்தில் கலந்துகொண்டுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.