
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டன. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அருங்காட்சியகங்களை மக்கள் பாா்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தைப் பாா்வையிட வரும் பாா்வையாளா்கள் உரிய முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டுமென அருங்காட்சியகங்கள் துறை கேட்டுக் கொண்டுள்ளது. கரோனா குறைந்துள்ளதாக அரசால் அறிவிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் திங்கள்கிழமை முதல் பாா்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.