
திருச்சி: இருசக்கர வாகனத்தில் சென்ற பெயிண்டா் சாலை விபத்தில் பலியானாா்.
திருச்சி விமான நிலையம் அண்ணாநகா் பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா்கள் பெயிண்டா் அப்துல் முத்தலிப் (36), மின் பழுது நீக்கும் சுலைமான் (42). உறவினா்களான இவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு பணிமுடிந்து சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா்.
அப்போது நெடுஞ்சாலையிலிருந்து ஒய் பிரிவு சாலையில் வேகமாக திரும்பியபோது திடீரென இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் அப்துல் முத்தலிப் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். காயமடைந்த சுலைமான் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு வடக்கு பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.