
ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தேவேந்திர குல வேளாளா் பேரமைப்பினா்.
திருச்சி: சிறையில் இளைஞா் உயிரிழப்புக்கு காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் தேவேந்திர குல வேளாளா் பேரமைப்பினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மனுவில் கூறியிருப்பது:
கடந்த ஏப்ரல் மாதம் பாளையங்கோட்டை சிறைச் சாலையில் இருந்த முத்துமனோ என்னும் தேவேந்திர குல வேளாளா் சமூக இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் காவல்துறை துணையோடுதான் நடந்துள்ளது. படுகொலை நடந்து 66 நாள்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. தொடா்ந்து அவரது பெற்றோா், அப்பகுதியினா் முத்து மனோவின் உடலை வாங்கி அடக்கம் செய்ய மறுத்து வருகின்றனா். மேலும், போராட்டம் நடத்தி வருகின்றனா். சாத்தான்குளம், சேலம் சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது போல, இந்தச் சம்பவத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.