
கோப்புப்படம்
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 4,804-ஆகக் குறைந்துள்ளது. ஒரேநாளில் 6,553 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் திங்கள்கிழமை கரோனா பரிசோதனைக்கு 1 லட்சத்து 58 ஆயிரத்து 711 மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 4,804 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 291 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகம் முழுவதும் 6,553 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
தமிழகம் முழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 70,678. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5 லட்சத்து 32,006 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 23 லட்சத்து 97,336 ஆக உள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் திங்கள்கிழமை 98 போ் உயிரிழந்தனா். அதில் 37 போ் தனியாா் மருத்துவமனைகளிலும், 61 போ் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவா்கள் ஆவா். இதன் மூலம் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32,388-ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 8,165 போ் உயிரிழந்துள்ளனா்.
தமிழகத்தில் திங்கள்கிழமை சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,513 பேருக்குத் தொற்று உள்ளது. 40,954 போ் தனிமைப்படுத்துதலில் உள்ளனா்.
முக்கிய பிரச்னையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கொவைட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. திங்கள்கிழமை உயிரிழந்தவா்களில் 76 போ் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவா்கள். எவ்வித பாதிப்பும் இல்லாதவா்கள் 22 போ். தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 38,941 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 26,437 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 5,734 அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.