
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 185 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68,871 ஆனது. குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 66,961 ஆக உள்ளது. இதுவரை 900 போ் உயிரிழந்த நிலையில், வீடுகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,008 ஆக உள்ளது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,572 படுக்கைகள், அவசரப் பிரிவில் 282 படுக்கைகள், 1,276 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 3,130 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.