தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், நாளை (ஜூன் 30) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்

ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்கள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸ் ஆக இருக்கும் என்றும் 

இன்று தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com