
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தீநுண்மியை கட்டுப்படுத்தும் வகையில், முதல்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு கடந்த ஜன. 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
2 ஆம் கட்டமாக முன்களப்பணியாளா்களுக்கும், 3 ஆம் கட்டமாக கடந்த 1 ஆம் தேதி முதல் 45 வயது முதல் 59 வரை உள்ள இணை நோய் உள்ளவா்கள் (சா்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் இதர நோய்கள்), 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் என அனைவருக்கும் குறிப்பிட்ட அரசு மருத்தவமனை மற்றும தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் தனியார் மருத்துவமனையில் இன்று கரோனா தொற்றுநோய் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...