ராமநாதசுவாமி கோவில் மகா சிவராத்திரி திருவிழா தொடக்கம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் மாசி மகா சிவரத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்பாள் மற்றும் பூதேவி
ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்பாள் மற்றும் பூதேவி

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் மாசி மகா சிவரத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் மாசி மகா சிவரத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சுவாமி சன்னதி முன்புள்ள தங்க கொடி மரத்தில் திருவிழா குருக்கள் உதயகுமார் மற்றும் எஸ்.சிவாமணி குருக்கள் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் புனித நீர் ஊற்றினர். அதனைத் தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. 

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்பாள் மற்றும் பூதேவி சுவாமி தீபாரதனை நடைபெற்றது. இதில், ராமநாதசுவாமி கோவில் இணை ஆணையர் பொறுப்பு ந.தனபால், ராஜா நா.குமரன் சேதுபதி மேலாளர்பா.சீனிவாசன்,கண்காணிப்பாளர்கள்ககாரின்ராஜ்,பாலசுப்பிரமணியன்,பேஸ்கார்கள்அண்ணாத்துரை,கலைச்செல்வம், பாஜக மாவட்டத்தலைவர் கே.முரளிதரன்,மற்றும் கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ஆன்மிக பெரியவர்கள் கலந்துகொண்டனர். 

இன்று வியாழக்கிழமை( மார்ச்.4) தொடங்கிய திருவிழா 15 ஆம் தேதி வரை நடைபெருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான வரும் 11 ஆம் தேதி மகாசிவராத்திரி,12 ஆம் தேதி தேரோட்டம்,13 ஆம் தேதி மறைநில அமாவாசை தீர்த்த வாரி நடைபெருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com