திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்ற இறுதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் மக்களவைத் தொகுதியான கன்னியாகுமரியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 41 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டிருந்தது. 

சென்னை ஆழ்வாா்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி ஆகியோா் சென்றனா்.

மு.க.ஸ்டாலினுடன் 40 நிமிடங்களுக்கு மேலாகப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 7) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com