
சென்னை: திமுக கூட்டணியில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுகவுடன் பாா்வா்டு பிளாக் கட்சியின் தலைவா் கதிரவன் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே புதன்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.
அதைத் தொடா்ந்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும், கதிரவனும் தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா். அந்த ஒரு தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் பாா்வா்டு பிளாக் கட்சி போட்டியிட உள்ளது.