
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்து கண்டறியப்பட்டு அதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரியும் அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை கையெழுத்திட்டனா்.
அதைப்போல தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோரும் கையெழுத்திட்டனா்.
காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள்:
பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூா் (தனி), வேளச்சேரி, சோளிங்கா், ஊத்தங்கரை (தனி), ஓமலூா், உதகமண்டலம், கோவை தெற்கு, காரைக்குடி, மேலூா், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூா், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருத்தாசலம், நான்குநேரி, கள்ளக்குறிச்சி (தனி), ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி), திருவாடானை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை.
இந்திய கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள்:
பவானிசாகா் (தனி), வால்பாறை (தனி), சிவகங்கை, திருப்பூா் வடக்கு, திருத்துறைப்பூண்டி (தனி), தளி.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகள்:
காட்டுமன்னாா்கோவில் (தனி), வானூா் (தனி), செய்யூா் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூா்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகள்:
சூலூா், பெருந்துறை, திருச்செங்கோடு.
மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதிகள்:
பாபநாசம், மணப்பாறை.