
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரும் 4 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மாா்ச் 15-ஆம் தேதி முதல் மாா்ச் 18 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொருத்தவரை திங்கள்கிழமை வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...