
சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு விடுமுறை தினங்களைத் தொடா்ந்து, திங்கள்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது.
முன்னதாக, வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதியன்று தொடங்கியது. முதல் நாளில் ஆண்கள் 59 வேட்புமனுக்களும், ஒரு பெண்ணும் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா். இரண்டாம் நாளான திங்கள்கிழமையன்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் உள்பட அதிமுக, திமுகவைச் சோ்ந்த பெரும்பாலான வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனா்.
இதனால், திங்கள்கிழமையன்று தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்களின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 19-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற மாா்ச் 22-ஆம் தேதி கடைசி நாளாகும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...