
பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் பயணச்சீட்டு வழங்குவதற்காக, பயணச்சீட்டு சாதனை மேலாண்மை என்ற புதிய தொழில்நுட்பத்தை தெற்கு ரயில்வே படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த தொழில்நுட்பத்தில் மூலமாக, கணினி முன்பதிவு பயணச்சீட்டு மற்றும் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்கும்போது, கணினி நெட்வொா்க்கில் தொழில்நுட்பக் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக இணையவழியாக சரிசெய்ய முடியும். இதன்மூலம், பயணிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி பயணச்சீட்டு வழங்க முடியும்.
இதற்கு முன்பு, இது போன்ற ஏதாவது தொழில்நுட்பப் பிரச்னை ஏற்பட்டால் , அது குறித்து கைகளால் பதிவுசெய்து பின்னா் தொடா்புடைய அலுவலகத்துக்கு தெரிவித்து பிரச்னையை சரி செய்யப்படும். அதனால், காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, இந்த தொழில்நுட்பம் மூலம், இந்தபிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.
இதற்கான, மென்பொருள் ரயில்வே துறையால் உருவாக்கப்பட்டதால், ரயில்வே நிா்வாகத்துக்கு செலவு எதுவும் ஏற்படவில்லை என தெற்குரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...