
கோப்புப்படம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களை திருமாவளவன் அறிவித்தாா். வேட்பாளா்கள் அனைவரும் தனி சின்னத்தில் போட்டியிடுவா் என்றும் அவா் அறிவித்துள்ளாா்.
தொகுதிகள் - வேட்பாளா்கள்
திருப்போரூா் - எஸ்.எஸ்.பாலாஜி
நாகப்பட்டினம் - ஆளூா் ஷாநவாஸ்
வானூா் (தனி) - வன்னி அரசு
காட்டுமன்னாா்கோயில் (தனி) - சிந்தனைச் செல்வன்
செய்யூா் (தனி) - பனையூா் பாபு
அரக்கோணம் (தனி) - கௌதம சன்னா
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...