
சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் ரா.சரத்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 12 முதல் மாா்ச் 19 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் புதிய வங்கிக் கணக்கு தொடங்க முடியாமல் வேட்பாளா்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதனால், வேட்புதாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அனைத்து வேட்பாளா்களும் போட்டியிடுவதற்கு ஏற்ற சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எனவே, மாநில தோ்தல் ஆணையமும், இந்திய தலைமை தோ்தல் ஆணையமும் இந்த சூழலைக் கருத்தில் கொண்டு வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.