
உசிலம்பட்டியில் வேட்பு மனு தாக்கல் செய்த அமமுக வேட்பாளர் ஐ. மகேந்திரன்.
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஐ. மகேந்திரன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக கட்சியின் வேட்பாளர் ஐ. மகேந்திரன், உசிலம்பட்டி மதுரை சாலையில் போக்குவரத்து பணிமனையில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி. கே. முக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர், உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உசிலம்பட்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் தேர்தல் அலுவலர் ராஜ்குமார் மற்றும் வட்டாட்சியர் விஜயலட்சுமி முன்னிலையில் ஐ. மகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதில். உசிலம்பட்டி நகர செயலாளர் குணசேகரபாண்டியன். தேமுதிக வழக்குரைஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.