
திருச்செந்தூரில் அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக கட்சியின் வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.