
மனு தாக்கல் செய்ய மாட்டு வண்டியில் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
மாட்டு வண்டியில் விநோதமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.இளங்கோவன்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.இளங்கோவன் மாட்டு வண்டியில் விநோதமான முறையில் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மாட்டு வண்டியில், வழை மரம் உள்ளிட்டவற்றைக் கட்டிக் கொண்டு பலூன்களையும் தொங்கவிட்டபடி தனது ஆதரவாளர்களுடன் வந்து பார்ப்போரின் கவனத்தை ஈர்த்தார் இளங்கோவன்.