வாழப்பாடியில் மூடிக்கிடக்கும் பிஎஸ்என்எல் சேவை மையம்: வாடிக்கையாளர் அவதி

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பிஎஸ்என்எல் சேவை மையம், தொடர்ந்து 4 நாள்களாக மூடிக் கிடப்பதால், தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசி கட்டணங்களை செலுத்த முடியாமல்  வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வாழப்பாடியில் மூடிக்கிடக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம்.
வாழப்பாடியில் மூடிக்கிடக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பிஎஸ்என்எல் சேவை மையம், தொடர்ந்து 4 நாள்களாக மூடிக் கிடப்பதால், தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசி கட்டணங்களை செலுத்த முடியாமல்  வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மூடிக்கிடக்கும் சேவை மையத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசி, பிராட்பேண்ட் இணைப்புகளை பெற்றுள்ளனர். இப்பகுதி வாடிக்கையாளர்களுக்கு,  கட்டணங்களை செலுத்துவதற்கும், புதிய இணைப்புகள் பெறுவதற்கும், செல்லிடப்பேசி சிம்கார்டுகள் பெறுவதற்கும், பிற பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவைகளை வழங்குவதற்கும் வசதியாக, வாழப்பாடி பயணியர் மாளிகை எதிரிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் சேவை மையம் திறக்கப்பட்டு  இயங்கி வருகிறது. 

இந்த மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள், முறையாக திறந்து வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவையை வழங்குவதில்லை என ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை முதல் இன்று புதன்கிழமை வரை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள், தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசி இணைப்புகளுக்கு கட்டணங்களை செலுத்த முடியாமலும், பிற சேவைகளை பெற முடியாமலும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் சிலர் கூறுயதாவது:
வாழப்பாடி வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் விடுமுறையில் சென்றதால், வாடிக்கையாளர் சேவை மையம் தொடர்ந்து 4 நாள்களாக மூடிக்கிடக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகள் சேவை மையத்திற்கு மாற்று பணியாளர் நியமிக்காமல், கட்டணத்தொகை செலுத்துபவர்கள், ஆத்தூர் அல்லது  சேலத்தில் உள்ள வாடிக்கையாளர் சேவைக்கு சென்று,  கட்டணத்தை செலுத்துமாறு அலட்சியமாக பதில் தெரிவித்து வருகின்றனர்.

பலருக்கு மாதாந்திர கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், வாடிக்கையாளர் சேவை மையம் மூடிக்கிடப்பதால் அடுத்தடுத்த தினங்களில், கட்டணத் தொகையை செலுத்துவதற்கு, அபராதம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, மூடிக்கிடக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தை முறையாக திறந்து, வாடிக்கையாளர்களுக்கு உரிய சேவையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பிஎஸ்என்எல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com