
பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சார்பில் அக்கட்சியின் கழக அமைப்புச் செயலாளர் கதிர்காமு புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
இவருடன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, ஒன்றியச் செயலாளர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.