
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் திமுகவின் மேல்முறையீடு வழக்குகள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டிற்கு, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் திமுகவின் மேல்முறையீடு வழக்குகள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டிற்கு, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் ஒரேகட்டமாக வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக அரசியல் கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் மற்றும் பிரசாரப் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.
திமுக மற்றும் அதிமுக இடையேயான பிரசார யுத்தத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் முக்கிய பங்கு வகிக்கிறது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் எண்டு திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரசாரத்தின் போது கூறியிருந்தார்.
அதேநேரம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் திமுகவின் மேல்முறையீடு வழக்குகள்தான் காரணம் என்றும், அதனால் அடைந்த தொடர் மன உளைச்சல்கள்தான் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என்று முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுக அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் திமுகவின் மேல்முறையீடு வழக்குகள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டிற்கு, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் ளித்துள்ளார்.
இதுதொடர்பாக புதனன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஜெயலலிதா மறைவுக்கு திமுகவின் மேல்முறையீடு வழக்குகள்தான் காரணம் என்பது அதிமுகவினரின் திட்டமிட்ட பொய்; ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று, அதிமுகவின் தற்போதைய கூட்டணி உறுப்பினரான பாமகதான் தொடர்ந்து வலியுறுத்தியது' என்று அவர் தெரிவித்துள்ளார்.