
காங்கயம் அருகே, கிணற்றில் தவறி விழுந்து இறந்த மூதாட்டியின் சடலத்தை, கிணற்றில் இறங்கி மீட்கும் தீயணைப்புப் படை வீரர்.
காங்கயம் அருகே, மூதாட்டி ஒருவர் புதன்கிழமை காலை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
காங்கயம் அருகே, வரதப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன், விவசாயி. இவரது மனைவி கமலாத்தாள் (71). கமலாத்தாள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில், கமலாத்தாள் புதன்கிழமை காலை 6 மணியளவில், வீட்டிற்கு வெளியே வந்து நடந்து சென்றவர், எதிர்பாராதவிதமாக அருகே இருந்த தனியாருக்குச் சொந்தமான 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காங்கயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.