
விஜயகாந்துடன் டிடிவி தினகரன் சந்திப்பு
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்குச் சென்ற டிடிவி தினகரன், அங்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். தேர்தல் நிலவரம் குறித்தும் அடுத்தகட்ட பிரசாரம் குறித்தும் பேசப்படுவதாகத் தெரிகிறது.
முன்னதாக, அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் பிரச்னை காரணமாக அக்கூட்டணியில் இருந்து விலகி அமமுகவில் சேர்ந்தது. தற்போது அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்வர் வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.