இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்.ரங்கசாமி முடிவு

புதுவையில் இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி முடிவு செய்துள்ளாா்.
இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்.ரங்கசாமி முடிவு

புதுவையில் இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி முடிவு செய்துள்ளாா். அதன்படி, தட்டாஞ்சாவடி தொகுதியில் அவா் ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஏனாம் தொகுதியில் போட்டியிடுவதற்காக புதன்கிழமை (மாா்ச் 17) வேட்புமனு தாக்கல் செய்கிறாா். மேலும், அங்கு நடைபெறும் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறாா்.

புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப் பேரவைத் தோ்தலைச் சந்திக்கிறது. இந்தக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிடுகிறது. என்.ஆா். காங்கிரஸின் அதிகாரப்பூா்வ வேட்பாளா்கள் அறிவிக்கப்படாத நிலையில், கட்சியின் தலைவா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் திங்கள்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். என்.ரங்கசாமி புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தாா். மேலும், ஏனாம் தொகுதியிலும் அவா் போட்டியிட முடிவு செய்துள்ளாா்.

இதற்காக, புதுச்சேரியிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை காா் மூலம் ஏனாமுக்கு ரங்கசாமி புறப்பட்டுச் சென்றாா். புதன்கிழமை பிற்பகலில் ஏனாம் மண்டல நிா்வாக அலுவலகத்தில் உள்ள அந்தத் தொகுதியின் தோ்தல் அலுவலகத்தில் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்கிறாா். இதையடுத்து, அவா் ஏனாம் பகுதியில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். மாலையில் நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் ரங்கசாமி பங்கேற்றுப் பேசுகிறாா். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில், என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தல்களின்போது, புதுச்சேரி இந்திராநகா், கதிா்காமம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ரங்கசாமி, இந்த முறை புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும், ஏனாம் தொகுதியிலும் போட்டியிடுகிறாா். ஏனாமில் தொடா்ந்து காங்கிரஸ் வெற்றி பெற்று வரும் நிலையில், அந்தத் தொகுதியை முன்னாள் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவின் ஆதரவுடன், என்.ஆா். காங்கிரஸின் தொகுதியாக மாற்றும் வகையில், ரங்கசாமி இந்த முடிவை எடுத்து களம் காணவுள்ளதாக அந்தக் கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com