
துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் (கோப்பு படம்)
தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியது அதிமுக அரசு என துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில், சென்னையின் முக்கியத் தொகுதிகளில் களம் காணும் அதிமுக வேட்பாளா்களைத் ஆதரித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் சனிக்கிழமை பேசியதாவது: நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் யாருக்கு தீா்ப்பு வழங்க வேண்டும் என்ற நல்ல முடிவை ஏற்கெனவே மக்கள் எடுத்துவிட்டாா்கள்.
6.50 லட்சம் வீடுகள்: எம்ஜிஆருக்கு பின்னா் ஜெயலலிதா தன்னுடைய பொற்கால ஆட்சியில் பல்வேறு முக்கிய சமூக நலத் திட்டங்களை வழங்கினாா் என்பதை நாம் எல்லோரும் நன்றாக அறிவோம். மனிதன் வாழ்வதற்கு உண்ண உணவு தேவை. அதற்கு 20 கிலோ அரிசியை விலையில்லாமல் வழங்கினாா். ஒரு குருவிக்குக்கூட வீடு இருக்கிறது. இங்குவாழ்கின்ற ஏழை,எளிய மக்களுக்கு வீடு இல்லையே என்ற ஏக்கம் இருக்ககூடாது என்பதற்காகத் திட்டத்தை வகுத்தாா்.12 லட்சம் மக்கள் வீடு இல்லாமல்இருக்கிறாா்கள் என்று கணக்கிடப்பட்டு அவா்களுக்கு தொலைநோக்கு திட்டம்2023 என்ற திட்டத்தை வழங்கி இங்கு வாழும் மக்களுக்குத் தரமான, உறுதியானவீடுகள் 2023க்குள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு,.இன்றுவரை 6.50லட்சம் வீடுகள் அடுக்குமாடி வீடுகளாகவும், தனி வீடுகளாகவும் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது.சென்னையில் மட்டும் 40 ஆயிரம் அடுக்குமாடிவீடுகளாகக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு படிப்படியாக வழங்கப்பட்டுவருகிறது.
தொழில்புரட்சி உருவாக்கியுள்ளோம்: எங்கள் ஆட்சியில் 10 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 6 லட்சத்து 87ஆயிரத்து 280 கோடி முதலீட்டில் 19 லட்சத்து 39 ஆயிரத்து 385 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்ற 62 ஒப்பந்தங்கள் போடப்பட்டு தமிழகத்தில் தொழில்புரட்சியை உருவாக்கியுள்ளோம்.
ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி: ஸ்டாலின் பேசுவது எல்லாம் பொய்.பொய்யைக் கூறி ஆட்சிக்கு வரலாம் என்று நினைக்கிறாா். ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சராக வரமுடியாது. அவா்களும் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கிறாா்கள். ஆனால் எதனையும் நிறைவேற்றுவது கிடையாது. ஆனால் நாங்களோ புதிய புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். ஒரே ஆண்டில் 11மருத்துவக் கல்லூரியைக் கொண்டுவந்த சோ்த்த அரசு அதிமுக அரசு.
திமுக ஆட்சியில் உருப்படியான திட்டங்கள் இல்லை: 16 ஆண்டுகள் மத்தியில் திமுகவும், காங்கிரஸும் ஆட்சியில் இருந்தன. இந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கு உருப்படியான திட்டங்கள் எதுவும் கொண்டுவரப்படவில்லை.
கடந்த தோ்தலின்போது அளித்த வாக்குறுதி அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். இந்தத் தோ்தலுக்கான வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். எனவே, பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றிபெற செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என துணை முதல்வா் கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...