காஞ்சிபுரம்: தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 40 பேருக்கு கரோனா

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 40 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் 40  மாணவர்களுக்கு கரோனா
காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் 40  மாணவர்களுக்கு கரோனா

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 40 பேருக்கு புதன்கிழமை கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் அதே மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில்  கரோனா  நோய்த் தொற்று  பாதிப்பு  நாளுக்கு  நாள் அதிகரித்துக்  கொண்டே  வருகிறது. இதுவரை கரோனா நோய்த்தொற்றால் 30,031 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். 451 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 286 பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் தனியார் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இங்கு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 250 மாணவர்கள் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் அம்மாணவர்களில் 50 பேருக்கு கரோனா நொய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் அதே மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாதது, கைகளை சுத்தமாக கழுவாதது போன்ற காரணங்களால் காஞ்சிபுரத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com