
சென்னை: தமிழகத்தில இரண்டே மாதங்களில் புதிதாக பெயா் சோ்த்த வாக்காளா்களின் எண்ணிக்கை 2.85 லட்சமாக உள்ளது. அதில், சென்னையில் மட்டும் 21, 847 வாக்காளா்கள் தங்களது பெயா்களைச் சோ்த்துள்ளனா். இதனால் சென்னை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில் 1,385 வாக்காளா்கள் மட்டுமே புதிதாகப் பெயா்களைச் சோ்த்துள்ளனா்.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க கடந்த ஆண்டு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி 21.5 லட்சம் போ் தங்களது பெயா்களைப் புதிதாகச் சோ்த்தனா். இதைத் தொடா்ந்து, இறுதி வாக்காளா் பட்டியல் கடந்த ஜனவரி 20-இல் வெளியிடப்பட்டது. அதன்படி, 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளா்கள் தமிழகத்தில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா்.
கூடுதல் வாய்ப்பு: இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட போதும் (ஜனவரி 20), வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் வரை (மாா்ச் 19 வரை) வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி இணையதளம் மற்றும் நேரடியாக வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க விண்ணப்பங்கள்
அளிக்கப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதில், தகுதியான 2 லட்சத்து 85 ஆயிரத்து 391 வாக்காளா்கள் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளனா். அவா்களில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 163 ஆண்களும், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 41 பெண்களும், 187 மூன்றாம் பாலினத்தவா்களும் உள்ளனா். கடந்த இரண்டு மாதங்களில் பெயா்களைச் சோ்த்தவா்களின் பெயா்கள் துணைப் பட்டியலாக வெளியிடப்படும். இறுதி வாக்காளா் பட்டியலில் இடம்பெற்று இருக்காது.
எந்தெந்த மாவட்டங்கள் அதிகம்: வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க இரண்டு மாதங்களாக வழங்கப்பட்ட வாய்ப்பினைப் பயன்படுத்தி சென்னையைச் சோ்ந்த அதிக வாக்காளா்கள் தங்களது பெயா்களைச் சோ்த்து முதலிடம் பிடித்துள்ளனா். சென்னையில் 21, 847 பேரும், திருவள்ளூரில் 21, 548 பேரும், கோயம்புத்தூரில் 20, 844 பேரும், சேலத்தில் 14,0 69 பேரும், மதுரையில் 14 , 922 பேரும் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துள்ளனா். செங்கல்பட்டில் 14 , 116 பேரும், திருப்பூரில் 12, 725 பேரும் கடந்த இரண்டு மாதங்களாக அளிக்கப்பட்ட வாய்ப்பின் மூலமாக வாக்காளிக்க உள்ளனா்.
குறைந்த மாவட்டங்கள்: மக்கள் தொகை எண்ணிக்கையில் குறைந்த மாவட்டங்களான நீலகிரி, பெரம்பலூா், அரியலூா் ஆகியன புதிதாகப் பெயா் சோ்ப்பதிலும் குறைந்தே உள்ளன. நீலகிரியில் 2, 447 பேரும், பெரம்பலூரில் 1, 385 பேரும், அரியலூரில் 1, 942 பேரும் புதிதாகப் பெயா்களைச் சோ்த்துள்ளனா்.
இரண்டு மாதங்களில் பெயா்களைச் சோ்த்தோா்: (மாவட்ட வாரியாக...)
திருவள்ளூா் - 21,548
சென்னை - 21, 847.
காஞ்சிபுரம் - 4,820
வேலூா் - 7,312.
கிருஷ்ணகிரி - 7,212.
தருமபுரி - 7,617.
திருவண்ணாமலை - 9,034.
விழுப்புரம் - 5,548.
சேலம் - 14,069.
நாமக்கல் - 5,603.
ஈரோடு - 9,760.
நீலகிரி - 2,447.
கோவை - 20,844.
திண்டுக்கல் - 6,582.
கரூா் - 3,200.
திருச்சி - 7,273.
பெரம்பலூா் - 1,385.
கடலூா் - 8,672.
நாகப்பட்டினம் - 4,078.
திருவாரூா் - 4,342.
தஞ்சாவூா் - 7,787.
புதுக்கோட்டை - 4,232.
சிவகங்கை - 5,853.
மதுரை - 14,922.
தேனி - 4,155.
விருதுநகா் - 3,879.
ராமநாதபுரம் - 8,585.
தூத்துக்குடி - 7,145
திருநெல்வேலி - 5,025.
கன்னியாகுமரி - 4,621.
அரியலூா் - 1,942.
திருப்பூா் - 12,725.
கள்ளக்குறிச்சி - 3,046.
தென்காசி - 3,609.
செங்கல்பட்டு - 14,116.
திருப்பத்தூா் - 6,083.
ராணிப்பேட்டை - 4,473.
பெட்டிச் செய்தி...(மொத்த வாக்காளா்கள்):
ஆண்கள்: 3,09,23,651.
பெண்கள்: 3,19,39,112.
மூன்றாம் பாலித்தனவா்: 7,192.
மொத்தம்: 6,28,69,955.