பின்னடைவை சந்திக்கும் முக்கிய வேட்பாளர்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கட்சியின் முக்கிய வேட்பாளர்களாக இருந்த பலரும், இன்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.
பின்னடைவை சந்தித்த முக்கிய வேட்பாளர்கள்
பின்னடைவை சந்தித்த முக்கிய வேட்பாளர்கள்

நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நட்சத்திர வேட்பாளர்களாகவும், கட்சியின் முக்கிய வேட்பாளர்களாக இருந்த பலரும், இன்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.

அவர்களில், அமைச்சர் எம்.சி. சம்பத் பின்னடைவு
கடலூர் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் முதல் 5 சுற்றுகளில் 953 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். 6 ஆவது சுற்றில் திமுக வேட்பாளர் கோ.ஐயப்பன் 647 வாக்குகள் முன்னிலை பெற்றார். தொடர்ந்து 7 ஆவது சுற்றிலும் திமுக முன்னிலை பெற்றதால் அமைச்சர் பின்னடைவு சந்தித்து உள்ளார். மொத்தம் 25 சுற்றுகள் வாக்கு எண்ணப்படுகிறது.

காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி. ராமு முன்னிலையில் உள்ளார்.

துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பி.கே. சேகர்காபு பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் முன்னிலையில் உள்ளார்.

அமைச்சர் ஆர். காமராஜ் 343 வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். நன்னிலம் தொகுதியில் 6 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. முதல் சுற்றில் முன்னிலையில் இருந்த காமராஜ் அடுத்த 5 சுற்றுக்களிலும் பின்னடைவில் உள்ளார். 
காமராஜ் அதிமுக.....23135
ஜோதிராமன் திமுக.....23478
பாத்திமா பர்ஹானா நாதக....3000
 

ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளர் குஷ்பு பின்னடைவை சந்தித்துள்ளார். அதுபோல கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் பின்னணியில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் உள்ளார்.

ஆவடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் க. பாண்டியன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னிலை இருந்து வருகிறார். 

பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன் பின்னடைவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com