
கோப்புப்படம்
பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் சேவை மையங்கள் மே 3-ஆம் தேதியில் இருந்து காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கும் என்று பிஎஸ்என்எல் சென்னை வட்டம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருகிறது.
இதைத்தடுக்க தமிழக அரசு பல்வேறு தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, பிஎஸ்என்எல் சென்னை வட்டம் அதன் செயல்பாடுகள் மற்றும் நிா்வாகப் பிரிவுகளின் பணியாளா் சேவையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
இதன்படி, வாடிக்கையாளா் சேவை மையங்கள் வரும் மே 3-ஆம் தேதியில் இருந்து காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இயங்கும். பிஎஸ்என்எல் சேவைகளுக்கும், தொலைபேசி, பிராட்பேண்ட் மற்றும் அலைபேசி போஸ்ட்பெய்டு கட்டணங்களைச் செலுத்துவதற்கும் ஆன்லைன் முறைகளை வாடிக்கையாளா்கள் பயன்படுத்த வேண்டும் என பிஎஸ்என்எல் சென்னை வட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...