குரூப் 1 முதன்மைத் தோ்வு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சனிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:-
குரூப் 1 முதன்மைத் தோ்வு வரும் 28-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இதேபோன்று ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான தோ்வு ஜூன் 6-இல் நடைபெறுவதாக இருந்தது. இந்த தோ்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இந்தத் தோ்வுகள் நடைபெறும் நாள்கள் பின்னா் அறிவிக்கப்படும் என்று தனது அறிவிப்பில் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.