
தமிழகத்தில் மேலும் 28,897 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் சென்னையைச் சோ்ந்தவா்கள் 7,130 போ் ஆவா். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனா பாதித்தோா் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 80,259 ஆக உயா்ந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 21,767 பேருக்குத் தொற்று உள்ளது.
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்களில் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றினால் மேலும் 236 போ் உயிரிழந்தனா். அதில் 85 போ் தனியாா் மருத்துவமனையிலும், 151 போ் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்கள் ஆவா். இந்தநிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15,648 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 23,515 போ் இன்று குணமடைந்து வீடு திரும்பினா். மாநிலம் முழுவதும் இதுவரை 12.20 போ் குணமடைந்தனா். இன்று ஒரே நாளில் 1 லட்சத்து 53,790 மாதிரிகள் கரோனா சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 44,547 போ் தனிமைப்படுத்துதலில் உள்ளனா் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.