

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர். சண்முகசுந்தரம் இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபிறகு மாநில அளவில் முக்கிய பதவிகளில் மாற்றம் நடைபெற்று வருகின்றன.
மேலும், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்னதாகவே தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய நாராயணன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரத்தை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.