
மேட்டூர் அணை.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 97.83 கன அடியிலிருந்து 97.77 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 247 கன அடியிலிருந்து 259 கன அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.98 டிஎம்சியாக உள்ளது.
ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 400 கன அடியாக உள்ளது.