
தண்டையார்பேட்டை அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்தை பார்வையிட்டார் சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி
சென்னை தண்டையார்பேட்டை பகுதிகளில் உள்ள கரோனா பரிசோதனை மையங்களை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.
தண்டையார்பேட்டை மண்டலம் 45 ஆவது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்தையும், சித்தா கரோனா சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டார்.
_.jpg)
மேலும் பரிசோதனை மையங்களில் உள்ள மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
_.jpg)
அதேபோன்று அங்கு வீடுகளுக்குச் சென்று கரோனா அறிகுறிகள் உள்ளதா என கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் பேசியதுடன் சில ஆலோசனைகளையும் வழங்கினார்.