ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் விநியோகத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் தமிழகத்தின் மருத்துவ தேவைக்கு மட்டுமே பயன்ப
போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்படும் ஆக்சிஜன் நிரப்பிய முதல் கண்டெய்னர் லாரி.
போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்படும் ஆக்சிஜன் நிரப்பிய முதல் கண்டெய்னர் லாரி.


தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் விநியோகத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன்  தமிழகத்தின் மருத்துவ தேவைக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது ஆலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற படுக்கை வசதிகள் இல்லாமலும், ஆக்சிசன் தட்டுப்பாடு காரணமாக உயிர் இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது.

இதற்கு துத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கே ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படும் என்று உறுதியோடு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. 
இதையடுத்து தமிழக அரசும் அளித்த உத்தரவை அடுத்து மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தலைமையிலான  9 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு இந்த கண்காணிப்பு குழுவினர் காலை, மாலை என இரு நேரங்களில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான சோதனை ஓட்டமும் முடிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஆக்சிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு ஏதுவாக கண்டெய்னர் லாரிகளும் ஆலைகளுக்கு கொண்டு வரப்பட்டது. புதன்கிழமை இரவு ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. முதல் கட்டமாக 5 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. 

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை காலை தொடங்கியது. ஆக்சிஜன் நிரப்பிய முதல் கண்டெய்னர் லாரி நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு  போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. 

கணிகாணிப்புக்குழுத் தலைவரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ் ஆக்சிஜன் விநியோகத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மற்றும் ஸ்டெர்லைட் ஆலை அதிகாரிகள் உடனிருந்தனர்.  இந்த லாரி போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. 

பின்னர் ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் பேசிகையில், ஆக்சிஜன் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 4.82 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் 98 சதவீதம் சுத்தமானது. ஸ்டெர்லைட் ஆலையில் 35 டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிசன் உற்பத்தி செய்ய முடியும். 

தற்போது முதற்கட்டமாக 5 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாளும் 10 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு இதைத் தொடர்ந்து முழு கொள்ளளவான 35 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்.

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் தமிழகத்தின் மருத்துவ தேவைக்கு மட்டுமே வழங்கப்படும் என்று ஆட்சியர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com