
ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கீழ்ப்பாகம் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து நேரு விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது
கூட்டத்தைத் தவிர்க்க நேரு விளையாட்டரங்கில் கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், கரோனா பரவி வரும் இக்கட்டான சூழலில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகளுக்கு வரும் கரோனா நோயாளிகளை அவசர ஊர்தி வாகனங்களில் காத்திருக்க வைக்கக் கூடாது என்றும்,
நோயாளிகளை மருத்துவமனைக்குள் கொண்டு சென்று மருத்துவர் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும் உயநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சிறைகளில் கரோனா சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய நீதிமன்றம், கரோனா உடல்களை தகனம் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.