
தில்லி அரசு சனிக்கிழமை 1.73 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஆனாலும் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு செலுத்துவதற்கு ஆறுநாள்களுக்கு தேவையான அளவு மட்டுமே உள்ளது என்று ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி தெரிவித்தாா்.
‘தற்போது கையிருப்பில் உள்ள கோவேக்சின் தடுப்பூசி அடுத்த மூன்று நாள்களுக்குத் தான் வரும். ரமலான் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
18 முதல் 44 வயதினருக்கு செலுத்துவதற்கான கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.